Friday, July 28, 2006

மாம்பழம்

நல்ல நல்ல மாம்பழம்
நீண்டு பருத்த மாம்பழம்
வெல்லக் கட்டி மாம்பழம்
வாங்கித் தின்று பார்க்கலாம்.

பொன் நிறத்த மாம்பழம்
பழுத்த புதிய மாம்பழம்
சின்ன மூக்கு மாம்பழம்
சிவப்பு பச்சை மாம்பழம்

சுவை மிகுந்த மாம்பழம்
சிறுவர் விரும்பும் மாம்பழம்
குவை குவையாய் மாம்பழம்
காண வாயும் ஊறுமே.

Wednesday, July 26, 2006

ஆட்டுக்குட்டி

துள்ளி வரும் ஆட்டுக்குட்டி
துணிந்து வரும் ஆட்டுக்குட்டி
பள்ளி செல்ல வருவயோ?
பாடம் சொல்லித் தருவையோ?

கள்ளம் இல்லை உன்மனத்தில்
கபடம் இல்லை உன்மனத்தில்
பள்ளம் மேடு எதுவந்தாலும்
பாய்ந்து ஓடும் ஆட்டுக்குட்டி.

தொல்லை இல்லா ஆட்டுக்குட்டி
தோல் கறுத்த ஆட்டுக்குட்டி
சொல்லைக் கேட்டு வீட்டையே
சுற்றி வரும் ஆட்டுக்குட்டி.

அசைந்தா டம்மா அசைந்தாடு

ஆசைக் கிளியே அசைந்தாடு
இசையோ டொன்றாய் அசைந்தாடு
ஈரக் குலையே அசைந்தாடு

உதய நிலாவே அசைந்தாடு
ஊதும் குழலே அசைந்தாடு
எழிலாய் வந்து அசைந்தாடு
ஏற்றத் தேடு அசைந்தாடு

ஐயம் விட்டு அசைந்தாடு
ஒழுக்கம் பேணி அசைந்தாடு
ஓவிய நூலே அசைந்தாடு
ஔவிய மின்றி அசைந்தாடு

Saturday, May 06, 2006

காக்கா காக்கா பறந்து வா

காக்கா காக்கா பறந்து வா

காலையில் எழுந்து பறந்து வா


கோழி கோழி ஓடி வா

குஞ்சைக் கூட்டி ஓடி வா


கோழிச் சேவல் ஓடி வா

கூவி எழுப்பிட ஓடி வா


கிளியே கிளியே பறந்து வா

கிள்ளை மொழி பேசி வா


பப்பி பப்பி பாய்ந்து வா

பந்தை வாயில் கெளவி வா


வெள்ளைப் பசுவே விரைந்து வா

பிள்ளைக்குப் பால் கொண்டு வா

Saturday, March 18, 2006

பம்பரம்

சின்ன சின்ன பம்பரம்

வண்ண வண்ண பம்பரம்



கன்னம் போல மின்னுதே

கடைந்த இந்த பம்பரம்



சாட்டை சுற்றி வீசினேன்

சுழன்று என்னை கவர்ந்ததே

அன்பு சி. நடராசன்

தோசை

தோசை அம்மா தோசை

அரிசி மாவும் உளுந்த மாவும்

கலந்து சுட்ட தோசை

அப்பாவிற்கு நான்கு

அண்ண்னுக்கு மூன்று

அக்காவுக்கு இரண்டு

பாப்பாவுக்கு ஓன்று

சீனி நெய்யும் சேர்த்து

கூடி கூடி உண்போம்

மாம்பழம்

மாம்பழமாம் மாம்பழம்

மல்கோவா மாம்பழம்



சேலத்து மாம்பழம்

தித்திக்கும் மாம்பழம்



அழகான மாம்பழம்

தங்கநிற மாம்பழம்



உங்களுக்கு வேண்டுமா

இங்கே ஓடி வாருங்கள்

பங்கு போட்டுத் தின்னலாம்



அழ வள்ளியப்பா

நாய்க்குட்டி

எங்கள் வீட்டு நாய்க்குட்டி

நன்றி உள்ள நாய்க்குட்டி



வெள்ளை நிற நாய்க்குட்டி

துள்ளி ஓடும் நாய்க்குட்டி



குட்டி பாப்பா தன்னோடு

குதித்து ஆடும் நாய்க்குட்டி



கண்ணைப் போல வீட்டையே

காவல் காக்கும் நாய்க்குட்டி

சின்னப் பூனை

சின்னச் சின்னப் பூனையாம்

சீறிப் பாயும் பூனையாம்



கன்னங்கரியப் பூனையாம்

கருப்பு மீசைப் பூனையாம்



இரவில் சுற்றும் பூனையாம்

எலியைப் பிடிக்கும் பூனையாம்



புலியைப் போன்ற பூனையாம்

புத்திசாலிப் பூனையாம்

பொம்மை

பொம்மை பொம்மை பொம்மை பார்

புதிய புதிய பொம்மை பார்



கையை வீசும் பொம்மை பார்

கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார்



தலையை ஆட்டும் பொம்மை பார்

தாளம் போடும் பொம்மை பார்



எனக்கு கிடைத்த பொம்மை போல்

ஏதும் இல்லை உலகிலே



தணிக்கை உலக நதன்

குள்ள வாத்து

குள்ள குள்ள வாத்து

குவா குவா வாத்து



மெல்ல உடலைச் சாய்த்து

மேலும் கீழும் பார்த்து



செல்லமாக நடக்கும்

சின்ன மணி வாத்து

நிலா

நிலா நிலா ஓடி வா

நிலாமல் ஓடி வா



மலை மீது ஏறி வா

மல்லிகைப் பூ கொண்டு வா



வட்ட அட்ட நிலவே

வண்ண முகில்ப் பூவே



பட்டம் போல பறந்து வா

பம்பரம் போல சுற்றி வா

அணில்

அணிலே அணிலே ஓடி வா

அழகிய அணிலே ஓடி வா



கொய்யா மரம் ஏறி வா

குண்டு பழம் கொண்டு வா



பாதி பழம் உன்னிடம்

பாதி பழம் என்னிடம்



கூடிக் கூடி இருவரும்

கொறித்து கொறித்து தின்னலாம்

அம்மா

அம்மா அம்மா என்னம்மா

அழகாய் முத்தம் தந்திடுவாய்

கண்ணைப் போல என்னையே

காக்கும் கருனை தெயவம் நீ

அம்மா நானும் வளர்ந்திடுவேன்

உலகம் எல்லாம் புகழ்ந்திடுவேன்.